Home இலங்கை அரசியல் தமிழரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு : எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார்

தமிழரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு : எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார்

0

தமிழரின் சரித்திரத்தில் முதற்தடவையாக தமிழரின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று துலங்கப்போகிறது. அதை தடுப்பதாக இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய முன்னணி 10 ஆசனங்களையாவது பெற்றிருக்கவேண்டும்.அதுவே எமது இலக்கு.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நடைபெற உள்ள நாடாளுமன்ற
தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்
சுப்பிரமணியம் தவபாலன் வேட்பாளர்களான திலகநாதன் கிந்துஜன் , தேவதாஸ்
தினேஷ்குமார் மற்றும் றகுமதி சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் நேற்று(16)
மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை
நடத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளியில்..

https://www.youtube.com/embed/pHSlSzNoHuc

NO COMMENTS

Exit mobile version