Home முக்கியச் செய்திகள் காலிமுகத்திடல் போராட்டத்தின் இரண்டாம் கட்டம்: எச்சரிக்கும் அனுர தரப்பு

காலிமுகத்திடல் போராட்டத்தின் இரண்டாம் கட்டம்: எச்சரிக்கும் அனுர தரப்பு

0

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த வருட இறுதியில் ஆரம்பமாகுமென தேசிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

இதன்படி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படுமென அந்த கட்சியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyaratna) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகியிருந்தனர்.

சிறிலங்காவின் அதிபர்

இதனை தொடர்ந்து, தந்திரமான நரியொன்று பதவிக்கு வந்ததாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தந்திரமான நபர்களிடமிருந்து நாட்டை மீட்டு மனிதாபிமானத்துடன் செயல்படக்கூடிய ஒருவரை சிறிலங்காவின் அதிபராக தமது கட்சி நியமிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு சலுகை

அத்துடன், அதிபர் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள சக்தியின் அதிக உறுப்பினர்களுடனான நாடாளுமன்றம் அமைக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், வருமானத்தை அதிகரித்து செலவை கட்டுப்படுத்தும் திட்டத்தை தமது கட்சி கொண்டுள்ளதாகவும், இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு பாரிய சலுகைகளை வழங்க முடியுமெனவும் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version