Home இலங்கை அரசியல் குரங்குகளுக்கும் மயில்களுக்கும் பகிரங்க அறிவிப்பு! அரசாங்கத்தை கிண்டல் செய்த கம்மன்பில

குரங்குகளுக்கும் மயில்களுக்கும் பகிரங்க அறிவிப்பு! அரசாங்கத்தை கிண்டல் செய்த கம்மன்பில

0

 நாட்டில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்குகள், மயில்கள் மற்றும் மர அணில்கள் போன்றவற்றிடம் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் (03.03.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குரங்குகள், மந்திகள், மயில்கள் மற்றும் மர அணில்கள் அரசாங்கத்தின் கணக்கெடுப்பிற்கு உதவ வேண்டுமென உலக வனவிலங்கு தினமான இன்று விலங்குகளிடம் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பு 

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 9.05 மணி வரையில் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன கணக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளதாகவும் இதற்கு வன விலங்குகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் விலங்குகள் தாமாகவே முன்வந்து விவசாய நிலங்களுக்கு சென்று கணக்கெடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் அரசாங்கத்தை இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version