Home இலங்கை அரசியல் விடுதலை புலிகளுக்கு பின்னர் உயிராபத்தான சூழல்.. கம்மன்பில அதிருப்தி

விடுதலை புலிகளுக்கு பின்னர் உயிராபத்தான சூழல்.. கம்மன்பில அதிருப்தி

0

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு பின்னர் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பயங்கர உயிராபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இன்று (2025.10.27) நடத்திய ‘மக்கள் குரல்’ என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் ஒரு குற்றவாளியாக தான் பார்க்கப்பட்டார்.குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

கொலை கலாசாரம்

அவ்வாறு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் மரணத்தண்டனை விதிக்கப்பட முடியாது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் என நிறைய விடயங்கள் உள்ளன.

அப்படியென்றால் நீதிமன்றம், ஜனாதிபதியின் சர்வாதிகார பலம் இவை அனைத்தும் பாதாள குழுக்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாகவே தோன்றகிறது. இன்றைய அரசாங்கம் மக்களின் வாழ்வதற்கான உரிமையை பறித்த வண்ணம் உள்ளது.

அரசாங்கத்தில் நகர சபைத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார் ‘ஒரு இலட்சம் போரை கொலை செய்தாவது ஆட்சியை தக்க வைப்தாக’அதன் முதல் கொலையா வெலிகம பிரதேச சபைத் தலைவர் என கேட்க தோன்றுகிறது.

ஹிட்லரான ஜனாதிபதி

இலங்கை பொலிஸ் இன்று ஹிட்லரின் பொலிஸ் போல் ஆகிவிட்டதா? அன்று தங்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து பெசிஸ்ட் வாதத்தை முறையடித்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்தனர்.

அதே போல் இன்றும் இலங்கையில் பெசிஸ்ட்வாதம் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உள் தூங்கிக் கொண்டிருந்த ஹிட்லர் விழித்து கொண்டார் போல் தெரிகிறது.

அதனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் எங்களின் அரசியல் சித்தாந்தங்களை மறந்து ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராடவுள்ளோம் என்றார்.

NO COMMENTS

Exit mobile version