Home இலங்கை அரசியல் பொலிஸார் மாறு வேடத்திலா செவ்வந்தியை கைது செய்தனர்.. சந்தேகம் வெளியிடும் கம்மன்பில

பொலிஸார் மாறு வேடத்திலா செவ்வந்தியை கைது செய்தனர்.. சந்தேகம் வெளியிடும் கம்மன்பில

0

பொலிஸ் அதிகாரி ஒலுகல, சேலை அணிந்து மாறு வேடத்தில் செவ்வந்தியை கைது செய்துள்ளதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசாங்கம் ஊடக அனுசரணை வழங்கியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இதற்கு முன்னரும் குடு சலிந்து, அரக்கட்டா, மாகந்துரே மதுஷ் போன்ற குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

அரசாங்கத்தின் தவறு 

ஆனால் எவ்வித ஊடக பிரபலம் வழங்கப்படவில்லை.
நேபாளம் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டது. முதல் ஒலுகல செவ்வந்தி பக்கத்தில் அமர்ந்திருந்தது முதல் இலங்கை வரும் வரை அனைத்தையும் காண்பித்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் அடையாளம் காணப்பதற்கான அடையான அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் செவ்வந்தியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து விட்டனர்.

அதனால் இவரால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியங்களுக்கு பெரும் தவறு நடந்துள்ளது.
அரசாங்கத்தின் உறுப்பினர்களே இந்த குற்றவாளிகளை வர்ணிப்பதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

இவர்களை சிறுவர்கள் நாயகர்களாக நினைக்க கூடும். அதனால் அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் பெயர்களை கொண்டு அழைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version