Home இலங்கை அரசியல் கம்மன்பில கைதாகுவதை தடுக்கும் மனு விசாரணைக்கு

கம்மன்பில கைதாகுவதை தடுக்கும் மனு விசாரணைக்கு

0

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் அறிக்கைகள் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலாய்வு திணைக்களம் கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இடைக்கால தடையுத்தரவு

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிஐடி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர் தாய்லாந்துக்கு சென்ற பின்னர் தனது சட்டத்தரணி மூலமாக தான் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்கமாறு கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version