காந்தி கண்ணாடி
ரணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஷெரிஃப். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காந்தி கண்ணாடி.
இப்படத்தின் மூலம் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது. படம் வெளிவரும் நாளன்று பல பிரச்சனைகள் காந்தி கண்ணாடி படம் எதிர்கொண்டு இருந்தாலும், தற்போது நன்றாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் பாலாவுடன் இணைந்து பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.
ரவி மோகனின் 45வது பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துகள்.. சம்பளம் குறித்து வெளிவந்த தகவல்
ஐந்து நாட்கள் வசூல்
மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றிருக்கும் காந்தி கண்ணாடி படம் வெற்றிகரமாக ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இப்படம் கிட்டத்தட்ட வெற்றியை பெற்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
