Home முக்கியச் செய்திகள் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அம்பலமான பகீர் தகவல்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அம்பலமான பகீர் தகவல்

0

கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) கொலை செய்யப்படுவதற்கு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் ஒத்திகை பார்த்த விடயம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கி சூடு நடத்திய துப்பாக்கிதாரியான கமோண்டோ சமிந்துவும் மற்றும் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தியும் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்திற்கு சென்று ஒத்திகை பார்த்து திட்டத்தை ஒழுங்கமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கொழும்பு குற்றப்பிரிவை சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அறை

இது தொடர்பான தகவலை, தற்போது தடுப்புக் காவலில் உள்ள மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த சந்தேக ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நபரே அவர்கள் இருவரையும் நீதிமன்ற அறையை காட்டுவதற்கு முன்வந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், நீதிமன்ற அறையைக் காட்ட முன்வந்ததற்காக செவ்வந்தியிடமிருந்து 2000 ரூபாய் பெற்றதாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version