Home முக்கியச் செய்திகள் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

0

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (20) நாடாளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

விசாரணை

புதுக்கடை  நீதிமன்றத்திற்குள் நேற்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து, பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு

இதற்கிடையில், வழக்கறிஞர் வேடமணிந்து வந்து கொலையாளிக்கு உதவிய பெண் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

  

இந்த நிலையில், குறித்த சம்பவத்தினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த தடையோ அல்லது அச்சுறுத்தலோ இல்லை என்றும் நேற்று நடந்தது பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களின் செயல்கள் மட்டுமே எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version