யாழ் நகரில் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட
கும்பல் கைது செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கமைய
நேற்று (19)நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.
இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட எட்டு பேர் கைது
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட
எட்டு பேர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும்
ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது.
இரண்டு பிரதான சந்தேகநபர்களிடம் இருந்து ஆறு கிராம் , இரண்டு கிராம் ஐஸ்
போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டதுடன் ஏனையவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும்
ஐஸ் போதைப்பொருள் என்பன சிறியளவில் மீட்கப்பட்டது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
கைதானவர்கள் யாழ் நகர் மற்றும் புற நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்த
காவல்துறையினர், மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றனர்.
