Home இலங்கை சமூகம் இலங்கையில் கழிவுகளிலிருந்து எரிவாயு: சாதனை படைத்த இளைஞன்

இலங்கையில் கழிவுகளிலிருந்து எரிவாயு: சாதனை படைத்த இளைஞன்

0

பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து எரிவாயு உற்பத்தி முறைமையொன்றை கண்டுபிடித்துள்ளார்.

முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபரே இவ்வாறு வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை பரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார்.

இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து எரிவாயு உற்பத்தியாக்கி வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயுவை அவர் பயன்படுத்தியுள்ளார்.

மனித உடலமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

எரிவாயு உற்பத்தி

எரிவாயு உற்பத்திக்குப் பிறகு திரவ உரம் உப பொருளாக உற்பத்தி செய்யப்படுவதுடன் மேலும் திரவ உரத்தைப் பயன்படுத்தி காய்கறிகளை வளர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “எனது வீட்டில் சமையல் அறையில் இருந்து சேகரிக்கப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பரல்களில் போட்டு சில நாட்கள் செரிக்க வைக்கப்படும்.

வடக்கு, கிழக்கில் காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம்: பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலிப்பு

விவசாய நடவடிக்கை

இதற்கு சுமார் ஐந்து பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன பின்னர், அந்த பீப்பாய்களில் குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

மீதமுள்ளவை கரிம திரவ உரத்தின் துணை விளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாயு வீட்டில் உணவு சமைக்கப் பயன்படுகிறது

கரிம திரவ உரங்களைப் பயன்படுத்தி  விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு இதுவாகும்.

இந்த தயாரிப்புகளை மேம்படுத்தி நல்ல தொழில் தொடங்கி நல்ல வருமானம் பெறுவதே எனது நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கில் வருமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version