Home இலங்கை குற்றம் யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

0

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் மோடியின் சகா!

காணி மோசடி

குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

புலம்பெயர் தமிழர்கள்

அதற்கமைய காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You My Like This Video

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version