Home இந்தியா பதவி விலகிய கௌதம் அதானி

பதவி விலகிய கௌதம் அதானி

0

இந்திய தொழில்துறையில் பெரும்புள்ளியாக விளங்கும் கௌதம் அதானி, தனது குழுமத்தின் முக்கியமான அங்கமாக விளங்கும் “Adani Ports and Special Economic Zone” நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இந்த மாற்றம், இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 203(3) இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரின் மூத்த மகன் கரண் அதானி தற்போது நிறுவனம் முழுவதையும் நிர்வகிக்கின்றார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்

இந்தியாவின் இரண்டாவது கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், சமீப காலமாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வெளியேறியுள்ளார். 

அதானி குழுமத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், முறையான நிறுவன ஆட்சி மற்றும் புதிய தலைமுறை மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி குழுமம் தற்போது விமான நிலைய நிர்வாகம் முதல் துறைமுக வர்த்தகம் வரையிலும், போக்குவரத்து உள்கட்டமைப்பு மூலம் எனர்ஜி துறைகளில் இயங்கி வருகிறது.  

அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து கௌதம் அதானி வெளியேறிய நிலையில், இவர் தொடர்ந்து Non-Executive Chairman ஆக பதிவி வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version