Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வெளியாகவுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வெளியாகவுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்காகச் செலவிடக்கூடிய ஆகக்கூடிய தொகை அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னதாக வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்மானிக்கப்படவுள்ள தொகை

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) நேற்று (22) கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்றிருந்தது.

இந்தநிலையில், ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள சனத்தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பைக் கருத்திற் கொண்டு, குறித்த தொகை தீர்மானிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version