Home இலங்கை அரசியல் அநுர அணியினர் எல் போர்ட்காரர்கள்..! ரணில் கடும் விமர்சனம்

அநுர அணியினர் எல் போர்ட்காரர்கள்..! ரணில் கடும் விமர்சனம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பினரை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அவர், “நாடாளுமன்றத் தேர்தலின் போது எல் போர்ட்காரர்களைத் தெரிவு செய்ய வேண்டாம்
எனவும், அனுபவம் மிக்கவர்களைச் சபைக்கு அனுப்புமாறும் கோரினேன்.

பெரும்பான்மைப் பலம் 

எனினும், எல்
போர்ட் காரர்கள் சபைக்கு வந்தனர். இன்று வாகனத்தைச் சேதப்படுத்தி விட்டனர்.
வாகனத்தில் எடுப்பதற்கு ஒன்றும் இல்லை. 

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப்
பெரும்பான்மைப் பலம் கிடைக்கப்போவதில்லை. எனவே, பெரும்பான்மையைப் பெறுவதற்கு
எதிரணிகள் ஒன்றுபட வேண்டும்.

பெரும்பான்மைப் பலம் இருந்தால்தான் சபைத்
தலைவரைத் தெரிவு செய்ய முடியும். எனவே, நாம் எவருடனும் மோதத் தேவையில்லை. பெரும்பான்மையைப் பெறுவதற்கு
முயற்சிப்போம்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version