வடக்கு மாகாணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்த, காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்படும் என பொதுவெளியில் அறிவித்த அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூறுவதற்கு தயங்குவதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) நேற்று (18.06.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதுடன், அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதியையும் பெற்று, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதாக அரச தரப்பு சட்டவாதி மன்றுரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலதிக விரிவான செய்திகளுக்கு “தமிழ்வின்” காலைநேர பிரதான செய்திகளை காண்க…
https://www.youtube.com/embed/Z-YVJWoyyGw
