Home இலங்கை அரசியல் தலதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்…! வெளியான வர்த்தமானி

தலதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்…! வெளியான வர்த்தமானி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரளவின் (Thalatha Athukorala) வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதாரனவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பதவி விலகல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி

இந்நிலையில் ஏற்பட்ட வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தலதா அதுகோரளவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கருணாரட்ன பரணவிதாரன 36787 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version