Home இலங்கை அரசியல் அடுத்த வாரம் வெளியாகவுள்ள வர்த்தமானி : அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு

அடுத்த வாரம் வெளியாகவுள்ள வர்த்தமானி : அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு

0

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்தார்.

கொழும்பில் (Colombo)  நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணிகளைக் குறிப்பிடுவதில்லை.

நெல் கொள்வனவு 

வருடாந்தம் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளியாகவுள்ள வர்த்தமானி : அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு | Gazettefor Paddy And Rice Price Farmers Protect

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நெல்லை கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி அரசாங்கத்திடம் இருக்கவில்லை. இவ்வாறான காரணிகளால் தான் தற்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகளை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இம்முறை பெரும்போக அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் மெற்றிக் தொன் வரையிலான நெல்லை கொள்வனவு செய்வோம்.

வெளியிடப்படவுள்ள வர்த்தமானி 

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த வாரம் வெளியாகவுள்ள வர்த்தமானி : அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு | Gazettefor Paddy And Rice Price Farmers Protect

பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து அதனை அரிசியாக்கி சாதகமான விலைக்கு சந்தைக்கு விநியோகிப்பதற்கான திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளோம்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version