Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை 2025 தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை 2025 தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர  பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பங்களை ஜூன் 26 முதல் ஜூலை 21 வரை 2025 வரை சமர்ப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம்

பாடசாலை மாணவர்கள், தங்கள் பாடசாலையினூடாகவே விண்ணப்பிக்க வேண்டியதுடன்,
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தின் மூலம் சுயமாகவே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் சமர்ப்பித்த பின் அதன் அச்சு நகலை எதிர்கால தேவைக்காக வைத்திருக்க வேண்டும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதித் திகதி

பாடசாலை மூலமான விண்ணப்பங்களுக்கான பயனர் பெயரும் கடவுச்சொல்லும் ஏற்கனவே பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறுதித் திகதியான ஜூலை 21 இரவு 12 மணிக்கு பிறகும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க எந்த சந்தர்ப்பத்திலும் அவகாசம் வழங்கப்படமாட்டாது எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பின்வரும் எண்களில் தொடர்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்து.

Telephone numbers : 011-2784208 / 011-2784537 / 011-2785922

Hotline : 1911

Email : gcealexam@gmail.com

NO COMMENTS

Exit mobile version