2006ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு வருகை தந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் என துணை பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்திருந்தால், அரச பாடசாலைகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருப்பர் என்றும் கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கான ஆன்லைன் விண்ணப்பம்
இதன் காரணமாக 13ம் தரம் பாடசாலை கல்வி முறை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அடுத்த மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அந்த கால அவகாசம் எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.