Home இலங்கை கல்வி திருகோணமலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்த மாணவிகள்

திருகோணமலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்த மாணவிகள்

0

தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில்,
திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா (Kinniya) அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய
மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

எம். என். மின்ஹா திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், எம். ஏ.
எப். இனாசிரின் மாவட்ட மட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை
நிலைநாட்டி மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பிரிவு

இந்த பாடசாலைக்கு உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல்
தடவையிலே, இந்த மாணவிகள் இந்த சாதனை நிலை நாட்டி உள்ளனர்.

விஞ்ஞான பிரிவில், முதல் தடவையாக 13 மாணவிகள் இந்தப் பாடசாலையில் இருந்து
தோன்றியிருந்தனர். இதில் பத்து மாணவிகள் சித்தியடைந்திருந்தனர்.

இந்தப் பாடசாலைக்கு விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த
மாணவிகள் குறித்த சாதனையை நிலைநாட்டி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

இந்த பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவைத் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்காமல்
இருந்தார்கள். பெரும் போராட்டங்களைச் செய்து அனுமதி பெறப்பட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version