Home முக்கியச் செய்திகள் உயர்தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

உயர்தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

0

பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த சம்பவம் கினிகத்தேனை பகுதியில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய (Nawalapitiya) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் மாற்றப்பட்டுள்ளார்.

கிழித்து முகத்தில் பலமுறை தாக்குதல்

தான் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றதாகவும் கடந்த திங்கட்கிழமை (23) பாடசாலைக்கு சென்ற போது,

பாட ஆசிரியர் தனது குறிப்பேடுகளை கேட்ட நிலையில் தான் பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியதாகவும் இதன்போது, ​​ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கினிகத்தேனை காவல்துறை நிலையத்தில் தாம் முறைப்பாட்டளித்துவிட்டு சிகிச்சைக்காக செல்வதற்கு முற்பட்டபோது, தமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில் காவல் நிலையத்திற்கு அருகில் வந்து, தம்மை பலவந்தமாக பாடசாலைக்கு ஏற்றிச் சென்று முறைப்பாட்டை மீளப் பெற அழுத்தம் கொடுக்க முயன்றதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாக்குதல் நடந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக குறித்த மாணவனுக்கு எதிராகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் காவல்துறையினர் குறித்த மாணவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version