Home இலங்கை சமூகம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சாதாரண தர பரீட்சைகள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சாதாரண தர பரீட்சைகள்

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

கிழக்கு மாகாணம் 

அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் அமைதியான
முறையில் ஆரம்பமான பரீட்சைகள் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் குறித்த
விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகின்றன.
 

மேலும், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சை
நடவடிக்கைகள் எந்தவித தடங்கலின்றியும் முன்னெடுக்கப்படுவதாகவும் பரீட்சை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

செய்தி – யூசப் 

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில்
மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு
தோன்றுகின்றனர். 

செய்தி – குமார் 

முல்லைத்தீவு  

அதேவேளை, முல்லைத்தீவில் 2879 பாடசாலை பரீட்சார்த்திகள்,
535 தனியார் பரீட்சார்த்திகளும் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 33 பரீட்சை
மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 11 இணைப்பு காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 474,147 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார்
பரீட்சார்த்திகளும்
தோற்றவுள்ளதாகவும், விசேட தேவையுடையோருக்கு பரீட்சை நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி – ஷான் 

NO COMMENTS

Exit mobile version