Home இலங்கை கல்வி இலங்கை மாணவர்களுக்கு இலவசமாகிறது கூகுள் ஜெமினி

இலங்கை மாணவர்களுக்கு இலவசமாகிறது கூகுள் ஜெமினி

0

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு ஜெமினியின் அம்சங்கள் மற்றும் பிற தொடர்புடைய சலுகைகளை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பான தகவைலை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்த வசதி ஒக்டோபர் நடுப்பகுதியிலிருந்து இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

முயற்சிகளின் உச்சக்கட்டம்

இந்த நடவடிக்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையிலான பல மாத முயற்சிகளின் உச்சக்கட்டமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: TechRadar

அத்துடன், நவீன டிஜிட்டல் கருவிகள் மற்றும் கல்வி வளங்களை வழங்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version