2025 ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று (13) இரவு வானில் தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் பொழிவு “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids meteor shower) என்று அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
150 விண்கற்கள் தெரியும்
இன்று நள்ளிரவில் கிழக்கு திசையிலிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல், வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல், 3200 பேதான் (Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது.
இதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வெறும் கண்களாலேயே இதைக் காணலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
