Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தல் 2024: தபால் மூல விண்ணப்பக் காலம் நீடிப்பு

பொதுத் தேர்தல் 2024: தபால் மூல விண்ணப்பக் காலம் நீடிப்பு

0

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2024 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(8) நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்பது நிறைவடையவிருந்தது.

விண்ணப்பக் காலம் நீடிப்பு

எனினும் தபால் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்றைய நாள் நிறைவடைவதற்கு முன்னர் உரிய மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் அவற்றை ஒப்படைக்குமாறு சமன் ஸ்ரீ ரத்னாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எந்தவொரு காரணத்திற்காகவும் குறித்த காலவரையறை மீண்டும் நீடிக்கப்படமாட்டாதெனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gen-election-postal-application-deadline-extended-1728398636

NO COMMENTS

Exit mobile version