Home இலங்கை அரசியல் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க சதி! முன்னாள் எம்.பி இம்ரான் குற்றச்சாட்டு

சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க சதி! முன்னாள் எம்.பி இம்ரான் குற்றச்சாட்டு

0

பல கட்சிகளும் வேட்பாளர்களும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடித்து பிரதிநிதித்துவத்தை இழக்க
வைக்க திட்டமிடுவதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர்
இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா, பெரியாற்று முனை பகுதியில் இன்று(23.10.2024) மாலை இடம்பெற்ற தேர்தல்
பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் 

அவர் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகளும் 200க்கும்மேற்பட்ட
வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்தில் நான்கு நாடாளுமன்ற
உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பல கிராமங்களில் பல வேட்பாளர்கள்
களமிறக்கப்பட்டுள்ளமையால் மக்கள் மத்தியில் இது பொதுத் தேர்தலா அல்லது
உள்ளூராட்சி மன்ற தேர்தலா என சந்தேகிக்கின்றனர்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்க வைத்து பிரதிநிதித்துவத்தை இழக்க
வைக்க வேண்டும் என்ற சதியை நடாத்துகிறார்கள்.

எமது வாக்குகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் தவறான கருத்துக்களை ஏற்று தடுமாறுகின்றனர்.

இது எதிர்காலத்தில் புரியும். உரிமைகளுக்காக, சமூகத்துக்காக குரல் கொடுக்கும்
ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக
காணப்படுகின்றது”என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version