Home இலங்கை அரசியல் புதிய வடிவில் வெளிவரும் வேட்பாளர் பட்டியல்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

புதிய வடிவில் வெளிவரும் வேட்பாளர் பட்டியல்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் பட்டியலை இறுவட்டு வடிவில் (Digital Versatile Disc -DVD) வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாவது, 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த இறுவட்டைப் பெற முடியும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, சுயேச்சைக் குழுவின் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோரின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்த இறுவட்டுகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர் பட்டியல்

2024 வேட்பாளர் பட்டியலைக் கொண்ட இறுவட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி, வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.         

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 8,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version