Home இலங்கை அரசியல் தலைமைத்துவங்களின் பலவீனமே சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் : கே.வி.தவராசா பகிரங்கம்

தலைமைத்துவங்களின் பலவீனமே சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் : கே.வி.தவராசா பகிரங்கம்

0

இரா.சம்பந்தன் (R. Sampanthan) மற்றும் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) ஆகியோரின் ஆளுமையின்மையின் வெளிப்பாடு தான் இன்றைய சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா (K.v. Thavarasha) தெரிவித்தார்.

தலைமைத்துவத்தை சரியாக கையாளாமல் விட்டமையினால் இன்று தமிழரசுக்கட்சி தனியொருவரினுடைய கம்பனியாக மாறிவிட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran) எனக்கும் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் நான் தமிழரசுக் கட்சியினுள் வந்துவிடக் கூடாது என்பதிலும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் சுமந்திரன் விசேடமாக அக்கறையாக உள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். அவருக்கு என்ன தேவையோ அந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உலகமே அறிந்ததாகும்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுமாக இருந்தால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேணடுமென தெரியும்.“ என தெரிவித்தார்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களைப் பற்றிக் கூறுகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி

https://www.youtube.com/embed/PxTWVgRtvOE

NO COMMENTS

Exit mobile version