Home இலங்கை அரசியல் வன்னியில் தாெலைபேசி சின்னத்தில் றிசாட் பதியுதீன் வேட்புமனு

வன்னியில் தாெலைபேசி சின்னத்தில் றிசாட் பதியுதீன் வேட்புமனு

0

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் றிசாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் தாெலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

வவுனியா (vavuniya) மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11.10.2024) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல்

இதன்பாேது ரசிகா பிரியதர்சினி, நிராேஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்
மாவட்ட அமைப்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நுனைஸ்பாரூக் உள்ளிட்ட
வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ளது.

இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.

Source: https://ibctamil.com/article/general-election-nomination-2024-sjb-vanni-1728637255

NO COMMENTS

Exit mobile version