Home இலங்கை அரசியல் தனக்கு பிடித்த குடிபான வகை அதிகாரம் மாத்திரமே: ரணில் சூட்சும பதில்

தனக்கு பிடித்த குடிபான வகை அதிகாரம் மாத்திரமே: ரணில் சூட்சும பதில்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்துகொண்டபோது தனக்கு பிடித்த குடிபான வகை ”அதிகாரம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று(09.09.2024) இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த் அவர்,

பொருளாதார நிலைத்தன்மை

”நான் நாட்டை ஏற்றுக்கொண்ட பின்பு பொருளாதார நிலைத்தன்மை உருவாகியுள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களில் நிலைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தவும், அதற்காக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டவும் வேண்டியுள்ளது.

வெளிநாட்டு வருமானம் தற்போதும் போதுமாக இல்லை. நாம் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு சென்று அதனை செய்யத் தவறினால் ஆர்ஜன்டீனா போல நெருக்கடிக்குள் விழுவோம்.

மற்றைய கட்சிகள் போன்று வரியைக் குறைப்போம் என்று சொல்வதையே நானும் விரும்புகிறேன்.

தேசிய உற்பத்தி

ஆனால் அதற்கு போதுமானதாக எமது வருமானம் எமக்கு இல்லை. மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு அதிகமாக கடன் பெறமாட்டோம் என்ற இணக்கப்பாட்டையும் ஐஎம்எப் உடன் எட்டியிருக்கிறோம்.

பணத்தை அச்சிடவும் முடியாது. நாம் செலவுகளை அதிகப்படுத்தினால் 2025 வரவு செலவு திட்டத்திற்காக எமக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.

இதனை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்ட இடைவௌியையும் குறைத்திருக்கிறோம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version