Home இலங்கை அரசியல் அம்பாறையில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் திட்டவட்டம்

அம்பாறையில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் திட்டவட்டம்

0

யாழில்(Jaffna) நாம் இளம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதுடன் திறமைசாலிகளான இருபெண்களையும் நியமித்துள்ளோம் எனவே இந்த பட்டியலை நாங்கள் பெருமிதத்தோடு மக்கள்
முன்பாக வைக்க முடிவதுடன் அம்பாறையில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்
என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் (ITAK) வேட்பாளர் நியமனக்குழு இன்று(6) வவுனியாவில் கூடிய நிலையில்
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஏனைய மாவட்டங்களில் இன்னமும் வேட்பாளர் பட்டியல் பூர்த்திசெய்யப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து இலங்கை
தமிழரசுக்கட்சியாகவே போட்டியிடவேண்டும் என்ற முடிவை கட்சியின் செயலாளருக்கு
அறிவித்துள்ளார்கள்.

வேட்பாளர் தெரிவு 

அவ்வாறு தனித்துபோட்டியிடுவதாக
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சி உறுப்பினரோடு கலந்துரையாடியபின்னர்
வேட்பாளர்களை தெரிவுசெய்யமுடியும்.

திருகோணமலையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது, தமிழரசுக்கட்சியின்
சின்னத்திலும் பெயரிலும் போட்டியிடுகின்ற போதும் ஏனைய கட்சிகளில் இருந்து
வேட்பாளர்களை எமது பட்டியலில் இணைத்துக்கொள்வது என்று
முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சியின் பல உறுப்பினர்கள் கோரிக்கைகளை
விடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு உறுப்பினர்களும் கேட்கின்றபடி
கூட்டங்களை கூட்டிக்கொண்டு இருந்தால் 24 மணித்தியாலங்கள் போதாது. மத்திய
செயற்குழுவே இந்த நியமனக்குழுவை நியமித்தது.

நியமனக்குழுவிற்கு ஒரு பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது.

காலம் குறுகியதாக இருக்கிறது. கால அவகாசங்களையும்
கருத்தில் வைத்தே நாங்கள் செயற்படவேண்டியதாக இருக்கிறது.

மத்தியசெயற்குழுவின் தீர்மானம்

இதேவேளை கடந்த தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு
வழங்க கூடாது என்று தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது சற்று வித்தியாசமான
தீர்மானமாகவே எடுக்கப்பட்டது.

குறிப்பாக ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து
அதன்பின்னரும் போட்டியிட சந்தர்ப்பம் கொடுத்து அதிலே வெற்றிபெறாதவர்களாக
இருந்தால் அவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கொடுக்கத்தேவையில்லை என்று
மத்தியசெயற்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கான காரணம் என்னவெனில் தேர்தலில் குறித்த எண்ணிக்கையிலான வேட்பாளர்களையே
நிறுத்தமுடியும். அனைவரும் சொல்கிறோம் இளையவர்களுக்கும் பெண்களுக்கும் இடம்
கொடுக்கபோகின்றோம் என்று. எனவே அது கஸ்டமான ஒன்றாக இருக்கும்.

 புதியவர்களுக்கு இடம்

இந்தமுறை புதியவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்ற வகையில்நாட்டிலேயே ஒரு
மாற்றம் இடம்பெற்றுள்ளது.

எமது மக்களும் அவ்வாறான எதிர்பார்ப்பில்
இருக்கிறார்கள். எனவே அதனைகருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி புதியவர்களுக்கான இடவசதியை பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே
இருந்தவர்களுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

இதேவேளை யாழில்
போட்டியிடுவதற்கு கோரிக்கைவிடுத்த இரு பெண்
வேட்பாளர்களுக்கும் இடம்கொடுத்துள்ளோம்.

அவ்வாறான
குற்றச்சாட்டு இனிமேல் இருக்க கூடாது.

இதேவேளை கட்சியின்தலைவர் மாவைசேனாதிராஜா தேர்தலில் போட்டியிடவில்லை என்று
தெரிவித்திருக்கின்றார்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version