Home இலங்கை சமூகம் ஜெனீவாவில் தமிழர் போராட்டம்! எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு

ஜெனீவாவில் தமிழர் போராட்டம்! எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு

0

ஜெனீவாவில்  நடத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களின்
போராட்டத்துக்கு அங்குள்ள இலங்கையர்கள் அமைப்பு ஒன்று தமது எதிர்ப்பை பதிவு
செய்துள்ளது.

ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்களின் ஒரு கூட்டமைப்பான ‘அரியகம்மத்தன’
அமைப்பே தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

 இலங்கையர் அமைப்பு

அரியகம்மத்தன’ அமைப்பின் தலைவர் அரியமக்க தேரர், தலைமையிலான குழு, ஐக்கிய
நாடுகள் பேரவைக்கு சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாக சிங்களவர்களின் பாரம்பரியம்
மற்றும் வரலாற்று உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு உண்மை ஆணையகத்தை
நிறுவுமாறு அந்த அமைப்பு பேரவையை கோரியுள்ளது.

இதற்கு இணக்கம் வெளியிட்;டுள்ளதாகவும், அரியகம்மத்தன’ அமைப்பின் தலைவர்
அரியமக்க தேரர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version