மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின்போது ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் அவ்வாறு பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு
மேலும், நாடளாவிய ரீதியில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு இந்த நடவடிக்கை பொருத்தமானது என காவல்துறைதலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் அரசியல் கட்சிகள் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மேதின பேரணியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/get-permission-drones-are-used-for-may-day-parades-1714514878
