Home இலங்கை பொருளாதாரம் நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு: அரசு எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு: அரசு எடுத்துள்ள நடவடிக்கை

0

நாட்டில் இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக அதனை இறக்குமதி செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture) தீர்மானித்துள்ளது.

நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சு சமர்ப்பித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 17, 2020 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானியின்படி, இஞ்சி இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் உள்நாட்டு பாவனைக்கான உலர் இஞ்சியின் வருடாந்த தேவை 5,167 மெட்ரிக் தொன் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக விதை இஞ்சியை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2025) நாட்டில் உள்ள டொலர் கையிருப்பை பாதுகாக்கும் வகையில் உள்ளுர் கைத்தொழில்களுக்கு தேவையான இஞ்சியை மட்டும் இறக்குமதி செய்வதே பொருத்தமானது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version