நாட்டில் அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நாட்டில் 18 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) வெளியிட்டுள்ளது.
சில்லறை விலை
சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாவை விட அதிகம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை 600 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி விலை 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட்டின் விலை ரூபா 480 முதல் 500 வரையும் உள்ளது.
ஒரு கிலோ கறி மிளகாயின் சில்லறை விலை 900 ரூபாவாகும் ஒரு கிலோ போஞ்சி ரூபா 800 இற்கு விற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
மேலும் ஒரு கிலோ முருங்கைக்காய் 800 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் சில்லறை விலை 560 ரூபாவாகும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகும்.
ஒரு கிலோ கோவா 500 ரூபாவுக்கும் ஒரு கிலோ பாகற்காய் சில்லறை 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ புடலங்காய் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.