Home இலங்கை சமூகம் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏற்படும் பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில் தொலைபேசி ஊடாக ஒரு டிஜிட்டல் திட்டத்தை இலங்கை (Sri Lanka) அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  (Manusha Nanayakkara) குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வீட்டுப் பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் கிடைக்காவிட்டாலோ அல்லது ஏதேனும் பிரச்சனையில் சிக்கியிருந்தாலோ அவர்களின் தொலைபேசிகளில் இருந்து அணுகக்கூடிய டிஜிட்டல் திட்டம் எங்களிடம் இருக்கும்.

வீட்டுப் பணியாளர்கள்

இலங்கை 301,000 வீட்டுப் பணியாளர்களையும் மற்றும் 360,000 திறமையான தொழிலாளர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

பல தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக வீட்டுப் பணியாளர்கள் வெளிநாட்டு முதலாளிகளால் தகாதமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் இந்தநிலையில், சட்டப் பாதையில் செல்பவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version