Home முக்கியச் செய்திகள் முடங்கப்போகும் சுகாதாரதுறை : பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

முடங்கப்போகும் சுகாதாரதுறை : பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

0

எதிர்வரும் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால், நோயாளிகளின் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருத்துவப் பணிப்புறக்கணிப்பு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு

பதுளை(badulla) போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச(Palitha Rajapaksa) தொடர்பில் முறையான முறைப்பாடு எதுவுமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க(Chamil Wijesinghe) தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனைத்து வைத்தியசாலைகளிலும் 7 நாட்களுக்கு கறுப்புக் கொடி கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கு கால அவகாசம்

இச்சம்பவம் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய சுகாதார அமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் சாதகமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், மத்திய குழுவின் கூட்டத்தின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version