Home இலங்கை சமூகம் ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

0

சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை

எனினும் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, மறுநாளே அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது சிறைச்சாலை சிறைச்சாலையின் மூன்றாம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version