Home இலங்கை கல்வி இலங்கையின் ஹிந்தி மொழி கல்வியை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம்

இலங்கையின் ஹிந்தி மொழி கல்வியை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம்

0

இலங்கையில் ஹிந்தி கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி மூலமான ஹிந்தி சான்றிதழ் கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலக ஹிந்தி தினத்தின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின்; கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த பாரத்-இலங்கை ஹிந்தி சம்மேளனத்தின் போதே இந்த கற்கை நெறியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் மையங்கள் மூலம் நாடு முழுவதும் ஹிந்தி கற்றலை அணுகக்கூடிய நோக்கத்தை இந்த கற்கை நெறி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக ஹிந்தி தினம்

இந்தப் பாடத்திட்டத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இலங்கை கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையத் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன ஆகியோர்  ஆரம்பித்து வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஹிந்தி சம்மேளன நிகழ்வில், இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

உலக ஹிந்தி தினம், 1949 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஹிந்தி முதன்முதலில் பேசப்பட்டபோது அந்த மொழிக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 10 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.   

NO COMMENTS

Exit mobile version