Home இலங்கை அரசியல் ஞானசாரர் தொடர்பில் அநுர அரசாங்கத்திற்கு சாணக்கியனின் அறிவுரை

ஞானசாரர் தொடர்பில் அநுர அரசாங்கத்திற்கு சாணக்கியனின் அறிவுரை

0

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்குத் தேசிய மக்கள் சக்தி அரசு
இடமளிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் திருகோணமலைக்குச் சென்று, “வடக்கு மற்றும் கிழக்கு
விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு, பௌத்த
சின்னங்களை அங்கு வைப்பதற்குத் தடையாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், எனவே எவ்வித
காரணத்துக்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது” எனவும் கூறியிருந்தார்.

அரசாங்கத்திற்கு அறிவுரை 

இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

“எமது தமிழர் தாயகத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. பூர்வீகமாகத்
தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை வன்மையாகக்
கண்டிக்கின்றோம்.

இந்தச் செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு இனியும்
இருக்கமாட்டோம். அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசு, ஞானசார தேரரின் இனத்துவேஷ
செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version