Home சினிமா தமிழகத்தில் 16 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழகத்தில் 16 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

GOAT

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் வெளிவந்தாலே, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை கண்டிப்பாக நடக்கும்.

அந்த வகையில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்து இருந்தனர்.

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 410 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

தமிழக வசூல்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் GOAT எந்த அளவிற்கு இதுவரை வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 16 நாட்களில் ரூ. 198 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 200 கோடியை GOAT கடந்துவிடும் என தெள்ளத்தெளிவாக கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/goat-movie-16-days-tamilnadu-box-office-1726911360

NO COMMENTS

Exit mobile version