Home சினிமா விஜய்யின் கோட் படத்தின் முக்கிய இட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்- அஜித்தின் துணிவு படத்தை...

விஜய்யின் கோட் படத்தின் முக்கிய இட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்- அஜித்தின் துணிவு படத்தை வாங்கியவர்கள்

0

விஜய்யின் கோட்

விஜய் நடித்துவரும் கோட் திரைப்படம் பல வகையில் மக்களுக்கு ஸ்பெஷல். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

அதோடு தளபதி நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் இது, எனவே திரையரங்குகளில் பெரிய அளவில் படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் காட்சிகள் வரும் கூறப்பட்ட நிலையில் தற்போது அனுமதி இல்லாமல் விஜயகாந்த்தை AI மூலம் பயன்படுத்த கூடாது என பிரேமலதா விஜயகாந்த் வேறு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாடு ரைட்ஸ்

படம் குறித்து ஸ்பெஷல் அறிவிப்புகள் ஏதாவது வருமா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய நிறுவனம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. 

அஜித்தின் துணிவு படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ் விஜய்யின் கோட் பட தமிழக உரிமையை பெற்றுள்ளார்களாம். இந்த தகவல் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Source: https://cineulagam.com/article/goat-tamilnadu-distribution-rights-announcement-1720166748

NO COMMENTS

Exit mobile version