Home உலகம் ஆபிரிக்க நாடொன்றில் 223 பேரை சுட்டுகொன்ற இராணுவத்தினர்

ஆபிரிக்க நாடொன்றில் 223 பேரை சுட்டுகொன்ற இராணுவத்தினர்

0

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேரை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

கனேடிய தமிழர்கள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்திய ஒன்டாரியோ முதல்வர்

பயங்கரவாத தாக்குதல் 

இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு இராணுவ துருப்புகள் களம் இறக்கப்பட்டு சந்தேகத்திற்குள்ளான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி நான்டின் மற்றும் சோரா கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை அந்த நாட்டின் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த இந்த மனித உரிமைகளை மீறிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் உ்ட்பட சர்வதேச நிறுவனங்கள் விசாரணை நடத்த உள்ளன.

கனடாவில் பாரியளவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version