Home சினிமா கூலி இடைவேளை காட்சி குறித்து ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்.. திரையரங்கம் தெறிக்க போகிறது

கூலி இடைவேளை காட்சி குறித்து ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்.. திரையரங்கம் தெறிக்க போகிறது

0

கூலி

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படைப்பு கூலி. முதல் முறையாக இப்படத்தில் ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார் லோகேஷ்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க பெரிதும் எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த நிலையில், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

படத்தின் ரிலீஸ் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ப்ரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பேட்டிகள், இசை வெளியிட்டு விழா, ட்ரைலர் என அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கூலி திரைப்படத்தின் இடைவேளை காட்சி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியுள்ளார்.

51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

கூலி இடைவேளை காட்சி

இதில், “இடைவேளை காட்சியை திரையரங்கில் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கமல் ஹாசனின் ரசிகனாக எப்போதுமே எனக்கு கமல் ஸ்பெஷல்தான். ஆனால், முதல் முறையாக ரஜினி சாருக்கு படம் பண்ணும்போது, ரஜினி சார் படத்தோட இடைவேளை காட்சி இப்படித்தான் இருக்க வேண்டுமென இரண்டு வருடங்களாக உழைத்திருக்கிறேன். அதை திரையரங்கில் அவ்வளவு ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version