Home முக்கியச் செய்திகள் இளைஞரை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரி: உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

இளைஞரை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரி: உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

0

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குருநாகல் – கோகரெல்ல காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்றுமுன்தினம் (24) இரவு இப்பாகமுவ-மடகல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பெண் ஒருவருடன் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம்

அதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதமொன்று ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக காவல்துறை அதிகாரி மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்ததையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version