Home இலங்கை பொருளாதாரம் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

தங்கத்தின் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

0

தங்கத்தின் விலை இன்றைய தினம் மாத்திரம் பத்தாயிரம் ரூபா வரையில் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய விலை நிலவரம்

அந்தவகையில் இன்று கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 302,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 330,000 ரூபாவாக காணப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரம்

22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 379,200 ரூபாயாக காணப்பட்டுள்ளது. 

அத்துடன் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபயாக இருந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Source: https://tamilwin.com/article/gold-pawn-price-today-usd-1761214981

NO COMMENTS

Exit mobile version