Home இலங்கை அரசியல் சிங்கள மேடைகளில் பேசும் தமிழரசுக்கட்சியினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிங்கள மேடைகளில் பேசும் தமிழரசுக்கட்சியினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் யாராவது சிங்கள மேடைகளில் ஏறிக் கதைப்பார்களாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் உங்களுடைய பாதணிகளை கழற்றி அடியுங்கள் என கரைச்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துரோகம் செய்பவர்களுக்கு மக்கள் கட்டாயம் பாடம் படிப்பிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

“ஜனாதிபதி தேர்தலில் பொதுக்கட்டமைப்பினால் நிறுத்தப்பட்டுள்ள அரியநேத்திரனிற்கு ஆதரவாக அனைத்து தமிழ் மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.  அரியநேத்திரன் இனி ஒரு தேர்தல் கேட்கப் போவதுமில்லை. கட்சி தொடங்கப் போவதும் இல்லை.

தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தால் வடக்கு கிழக்கும் ஒரு காலத்தில் சிங்கள தேசமாக மாறும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தலைவர் போட்டி வந்ததால் தலைவர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தோற்றதால் அதன் பிறகு அவர் போடும் நாடகம் கொஞ்சமில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை முன்வைப்பதுடன் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலயம் கதைகளை மாற்றுகின்றனர்.

ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தீர்மானத்தை மத்திய குழுவில் இருக்கின்ற 19 பேர் தீர்மானிக்கின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் உங்களுடைய சுயநலத்திற்காக ஒட்டுமொத்த தமிழர்களையும் அடகு வைக்காதீர்கள்.“ என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/B4cWXuRiyRs

NO COMMENTS

Exit mobile version