Home இலங்கை பொருளாதாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

0

தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றமின்றி தொடரும் விலை

அதன்படி இன்றைய (03) தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 306,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 283,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version