Home இலங்கை பொருளாதாரம் சீன – அமெரிக்க மோதல் நிலை! தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு

சீன – அமெரிக்க மோதல் நிலை! தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு

0

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3,200 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பானது வரலாற்றில் முதன்முறையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் நிலை 

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் முறுகல் நிலை காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வடைந்து வருவதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

 

NO COMMENTS

Exit mobile version